alex

உடல் முழுவதும் காயங்களுடன் மரண பயத்தோடு அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்தை நாம் சமூகவலைதளங்களில் பார்த்துவிட்டு பரிதாபத்துடன் கடந்து சென்றிருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவனான அலக்ஸ் படத்தில் உள்ள காயமடைந்த அந்த சிரிய சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்து வருமாறு அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்தை ஒபாமா தனது முகநூலில் இந்தக் கடிதத்தை வீடியோ வடிவில் பகிர, அது வைரல் ஆகி 14 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

160820-aleppo-syria-omran-mn-1406_eb8811037da20435de42030ebd2fd969-nbcnews-fp-360-360போர் ஏற்படுத்தும் அலங்கோலத்தின் அடையாளமாக காட்சியளிக்கும் இந்த சிறுவன் பெயர் ஓம்ரன், சிரியாவின் அலெப்போ பகுதியை சேர்ந்தவன். இந்தப்படம் அலக்ஸிஸின் கண்ணில் படவே அவன் ஓம்ரனை தனது வீட்டுக்கு அழைத்துவரும்படி ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறான்.
ஓம்ரனை என் வீட்டுக்கு அழைத்து வந்தால் நான் அவனை எனது தம்பி போல பார்த்துக் கொள்வேன், நான், ஓம்ரன், எனது தங்கை கேத்ரின் எல்லோரும் ஒன்றாக விளையாடுவோம், பொம்மைகளை பகிர்ந்து கொள்வோம். எனது பள்ளியில் இருக்கும் சிரியாவைச் சேர்ந்த நண்பனை ஓம்ரனுக்கு அறிமுகம் செய்து வைப்பேன்… இப்படிப் போகும் அந்தக் கடிதம் ஒபாமாவின் மனதைக் கரைத்ததில் ஆச்சரியமில்லை.
நாம் அலெக்ஸிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார்.
அலெக்ஸின் கடிதம் கீழே:
alex-letter_custom-736ab6f61b10c129169ca8fe2a4b460a3f20b280-s800-c85