த்ராசலம்

நேற்று தெலுங்காiனாவில் ஆரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தெலுங்கானாவின் பத்ராசலம் நகரில்  புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த  ஆறு மாடிக் கட்டிடம் பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும், இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ந்டந்த இடத்தில் மீட்புக் குழுவினர் புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இந்த கட்டிடத்திற்கு அருகில் ஒரு கோவிலும் கட்டப்பட்டு வந்தது.

இந்த விபத்து கட்டுமானக் குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், கட்டிடத்தை கட்டுவதற்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஏற்கனவே பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் புதிதாக கட்டிடத்தின் நான்கு தளங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் புதிய கட்டுமானத்தை அசல் கட்டமைப்பு தாங்க முடியாமல் போனது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.