சென்னை:
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதி யுடன் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், வேட்புமனு பரிசீலனை ஜூலை 9ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 11ந்தேதி என்றும் அறிவித்துள்ளனர். மேலும் ஜூலை 18ம் தேதி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 எம்.பி.க்கள் கிடைக்கும் என்பது உறுதியான நிலையில், யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.