கேரளா ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாயினர்.

கேரளா மாநிலம் மாப்பில்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். விடுமுறையை கொண்டாட இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர்.

இவர்கள் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் படகு ஒன்றில் இன்று பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உள்பட 6 பேர் பலியாயினர். தகவலறிந்து அக்கம் பக்கம் இருந்தவர்களும், தீயனைப்பு துறையினரும் விரைந்து வந்து நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். ஒரு முதியவரும், ஒரு மாணவியும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6 people die in Kerala boat collapse, கேரளா ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி
-=-