நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநல பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அதிரடியாக பல கருத்துக்களைத் தெரிவித்துவந்தார். இந்த நிலையில் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவர்கள் கர்ணனனின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை பரிசோதனை செய்ய கர்ணன் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே நீதிபதி கர்ணன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் மற்றும் தனக்கெதிராக உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், உத்தரவு பிறப்பிப்பதாக பிறப்பித்தார். மேலும் 8 நீதிபதிகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மனநல பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கர்ணனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.