திருவனந்தபுரம்:
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல, கேரளாவில் தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.
அரசு அலவலகங்கள் மற்றும் அரசு பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றும் பெண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் பேறுகால விடுப்பு வழங்குவதில்லை.
இந்த நிலையில், கேரளாவில், தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மாதம் ரூ.1000 சிகிச்சை உதவித்தொகை வாங்க வேண்டும் என்றும் கேரள மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக இன்னும் சில வாரங்களில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.