சிரிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் ந்டந்த பயக்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீர்ர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. எனவே ஆப்கானிஸ்தான் எல்லை அருகே ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையான வசிரிஸ்தான் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.

ராணுவ வீரர்களை குறிவைத்து அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராணுவ தளபதி உள்பட 6 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பு இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாத தாக்குதல், 6 ராண்வ வீரர்கள், மரணம்