ந்தூர்

த்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே ஒரு பள்ளிப் பேருந்தும் டிராக்டரும் மோதிக்கொண்டதில் 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டதில் உள்ளது கனடியா சாலை.  இந்த  சாலையில் இன்று மாலை ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளுடன் சென்றுக் கொண்டிருந்தது.   அப்போது அந்த வாகனம் எதிரில் வந்த டிராக்டருடன் மோதியது.

இந்த விபத்தில் பள்ளி பேருந்து ஓட்டுனர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட ஆறு பேர் மரணம் அடைந்துள்ளனர்.    பல குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.   காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]