சென்னை:
தமிழகத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில், 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் போன்றவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 22ந்தேதி வரை பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட ஆய்வுககளை அடுத்து, இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் வரைவு வாக்காளர் இறுதிப்பட்டியலை, மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் வெளியிட்டார்.
அதில், தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் உள்ளனர் இவர்களில், 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து தொள்ளாயிரத்து 69 பெண் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்த்து, மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது, 18, 19 வயதுடையவர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http//elections.tn.gov.in என்ற இணைய முகவரிக்குள் சென்று வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதியதாக வாக்காளர்கள் சேர விரும்புபவர்கள், அதற்கான அலுவலகத்திலோ அல்லது www.nvsp.in என்ற இணைய முகவரிக்குள் சென்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாக்காளர் உதவி செயலி என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.