மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல தொட்டம் தீட்டியவர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், குடியிருப்பின் வெளிப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

எனவே சல்மான் கான் வீடு முன்பு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் விக்கி குப்தா, சாகர் பால் என அடையாளம் காணப்பட்டனர். அனுஜ் தபன் மற்றும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு இதுவரை, மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.