டெல்லி
இந்தியா முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் 5400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார்,
”நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை.
இதில் எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521. இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
காலியிடங்கள் ஏற்படுவதும் அவற்றை நிரப்புவதும் தொடர்ச்சியான செயல் முறையாகும்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஓய்வு, ராஜினாமா மற்றும் கூடுதல் தேவைகள் காரணமாக காலியிடங்கள் குறித்து கேள்வி எழுகின்றன, மேலும் பதவிகளை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகத்திடம் உள்ளது”
என பதில் அளித்துள்ளார்.