சென்னை

னுமதி இன்றி பேனர்கள் வைத்த 53 தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.,

நேற்று தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார். தவெக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருடைய பிறந்தநாளை சீரும், சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி விஜய்யை வாழ்த்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்தனர்.

ஒரு சில இடங்களில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க.வினரால் த.வெ.க.வினர் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.  மேலும் உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்ட இடங்களை போலீசார் ஆய்வு செய்து பேனர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது போலீசாருக்கும், த.வெ.க.வினருக்கும் வாக்குவாதம் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றது.

விஜய் பிறந்தநாளையொட்டி அனுமதி இன்றி எங்கெங்கு பேனர்கள் வைக்கப்பட்டது என்ற பட்டியலை போலீசார் சேகரித்து அந்த பேனரை வைத்து நிர்வாகி மீது வழக்குப்பதிவு நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். அதன்படி சென்னையில் அனுமதி இன்றி பேனர்கள் வைத்து தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]