மாட்ரிட்:

லகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ் ஸ்பெயினில் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. அங்கு  இன்று ஒரே நாளில் 510 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 1,46,690 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, இதுவரை  14,555 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  இதுவரை 14 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 82 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.  3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

கொரோனா உருவான சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஸ்பெயின் கொரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அங்க  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14555-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்து 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.