500kg’ Egyptian woman’s sister accuses Indian doctors of lying

 

உலகின் குண்டுப்பெண் இமான் அகமதின் உடல் எடை குறைந்து விட்டதாக மும்பை மருத்துவர்கள் கூறுவது பொய் என்று அவரது சகோதரி குற்றம்சாட்டுகிறார். ஆனால், சகோதரியை எகிப்து அழைத்துச் செல்ல பணமில்லாததால், குண்டுப்பெண்ணின் சகோதரி இப்படி நாடகமாடுவதாக சிகிச்சை அளிக்கும் மும்பை மருத்துவர் முஃபி லக்டவாலா கூறுகிறார்.

 

எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் என்ற பெண்மணி, 500 கிலோவுக்குமேல் உடல் எடையைக் கொண்டவராக  இருந்தார். அவரால் நடக்கவே முடியாது. எல்லா நாட்டு மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை அவரை தனி விமானத்தில் மும்பை அழைத்து வந்து சிகிச்சை அளித்தது. அனுமதிக்கப்பட்ட 2மாதத்தில் உடல் எடை பாதியாக அதாவது 250 கிலோவாக குறைந்து விட்டது என்று அந்த மருத்துவமனை டாக்டர்  முஃபி லக்டவாலா கூறியிருந்தார்.

 

ஆனால் அவர் சொல்வது  எல்லாம் பொய். ஒரு குண்டுமணி அளவு கூட இமான் எடை குறையவே இல்லை. உண்மையான தகவல்களை அவர் மறைக்கிறார் என்று  இமானின் தங்கை சைம்மா செலிம் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். எடை குறைந்திருந்தால், சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் இருந்த நிலையை ஆதாரத்துடன் விளக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஆனால் சைம்மா சொல்வது அனைத்தும் பொய் என்று குண்டுப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முஃபி லக்டவாலா மறுத்துள்ளார்.

 

‘தனது சகோதரியை எகிப்து அழைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. இமான் தற்போது அருமையாக உள்ளார். இமான் தற்தோது 172 கிலோ எடை மட்டுமே உள்ளார். சிகிச்சைக்கு நன்குஒத்துழைக்கிறார். அவரது நரம்பு களின் செயல்பாட்டை அறிய சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்  முஃபி லக்டவாலா கூறுகிறார்.

 

முதல் 15 நாள் வரை சைம்மா சரியாகத்தான் இருந்தார். அதன்பிறகு  எகிப்து அழைத்துச் செல்லலாம் என்று நாங்கள் கூறிய பிறகு தான், அங்கே கொண்டு போக பணம் இல்லையே என்பதற்காக இப்படி நாடகம் ஆடுகிறார் என்றும் டாக்டர்  விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் முஃபி லக்டவாலா, சைமன் செலீம், நீங்கள் மனிதாபிமானத்தைக் கொல்கிறீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எண்ணிப்பார்க்க உங்களுக்கு கடவுள்தான் உதவ வேண்டும். இமானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பேன். அவர் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

ஆக, குண்டுப்பெண்ணின் கதி என்னாகுமோ