திருப்பதி
கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
“தினமும் 50000 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் திட்டம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதியில் உள்ள ஆதரவற்றோர், யாசகர் என உணவின்றித் தவிப்போர் பலரும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேர்ட்ஸ் மருத்துவமனை, கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
பசித்த வயிற்றுக்கு உணவளிக்கும் இத்திட்டம் இறைச்சேவைக்கு மேலும் சிறப்பு செய்கிறது…