பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 51,486 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 95,99,565 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 2,33,520 ஆக இருக்கிறது.
இதன்மூலம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் 2வது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ மாநிலம் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் 55,087 இறப்புகளும் 1,86,4,977 பாதிப்புகளும் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து 20வது நாளாக தினசரி பலி எண்ணிக்கை சராசரியாக 1,000க்கும் அதிகமாக பதிவாகி உள்ளது என்று சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
[youtube-feed feed=1]