திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு 10 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில்  74, 352 மாதிரிகள் சோதிக்கப்பட்டத்தில் 6.64 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறி உள்ளதாவது: 5439 பேர் குணம் அடைந்த அதே நேரத்தில் நேற்று மட்டும் 29 சுகாதார ஊழியர்கள் உள்பட 4937 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 90 பேர் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் ஆவர். 340 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்று இன்னமும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

5439 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் ஒட்டு மொத்தமாக குணமானவர்களின் எண்ணிக்கை 9,46,910 ஆக பதிவாகி உள்ளது. தற்போது கேரளா முழுவதும் இன்னமும் 60,761 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 643 பேரும், கொல்லத்தில் 547 பேரும் பத்தினம்திட்டாவில் 524 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,53,595 பேர் இன்னமும் 9510 மருத்துவ வார்டுகளில் கண்காணிப்பில் உள்ளனர்.