டெல்லி:
த்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று  விவசாயிகள்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள்,  விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள்  தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு உதவ 5000 கோடி ரூபாய் கடன் உதவி.இதன் மூலம் 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பலன் அடைவார்கள், மேலும் முத்ரா திட்டத்தில் கடன் சலுகை போன்றவற்றைஅறிவித்து உள்ளார்.
முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி செலவிடப்படுகிறது.
முத்ரா திட்டத்தில் ரூ.50,000க்கு குறைவாக கடன்பெற்று குறித்து காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு 2% வட்டி சலுகை.
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. இதில், ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படும். இதன் மூலம் 50 ல;lசம் சாலையோரம் தொழிலார்கள் பயன்பெறுவார்கள்.
மலிவுவிலை வீடுகளை வாங்குவதற்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு.
பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபாட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு.
நபார்ட் வங்கி மூலம் ஏற்கனவே அளிக்கப்படும் ரூ.90 ஆயிரம் கோடியுடன் சேர்த்து கூடுதலாக ரூ.30,000 கோடி வழங்கப்படுகிறது.
நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு உதவ 5000 கோடி ரூபாய் கடன் உதவி. இதன் மூலம் 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பலன் அடைவார்கள்
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.