ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின் 8(1)(அ) பிரிவின்படி பதில் தெரிவிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
அந்தச் சட்டத்தின்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார நலன்கள், அண்டை நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் அல்லது குற்றச் செயல்களைத் தூண்டும் தகவல்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பதையும் இச்சட்டத்தின் 8(1)(அ) பிரிவின்படி தெரிவிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது