சென்னை:
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து, சென்னையில் பிரமாண்டமாக பொன் விழா நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், 1967-ஆம் ஆண்டு அப்போதையசென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய துணைமுதல்வர், ஓ பன்னீர் செல்வம் இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சென்னையில் பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும், அதையொ பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், மிழ்நாடு பொன்விழா ஆண்டை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.