திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, வழக்கறிஞரும் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, 50 வயதான மொய்த்ரா, 65 வயதான மிஸ்ராவை ஜூன் 3 ஆம் தேதி ஜெர்மனியில் நடந்த ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், திருமணம் குறித்து மொய்த்ராவோ அல்லது மிஸ்ராவோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
வங்கி முதலீட்டு நிபுணரான மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணாநகரிலிருந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மேற்கு வங்க சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.
மொய்த்ரா முன்பு டேனிஷ் தொழிலதிபர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார்.
பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரான மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் பூரியிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.