டெல்லி: இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் 50 மருந்துகள் தரமற்றது என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
மருத்துவத்துறையில் பல்வேறு போலி மருந்துகள் நடவமாடி வருவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளுக்கான மருந்து காரணமாக, பல குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.பொதுவாகவே மாதம் ஒருமுறை மருந்துகளை மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது வாடிக்கை. இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல மருந்துகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் பல மருந்துகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இருமல், வலி,காய்ச்சல், சளிக்கான மருந்துகள் தரமின்றி தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த மாதம் சுமார் 1280 மருந்துகளை எடுத்து தர ஆய்வு செய்யதது. அதில், குறிப்பிட்ட 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை, கொல்கத்தா, கவுகாத்தி, இமாச்சல், சண்டிகர் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த மருந்து விவரங்களை, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில், வெளியிட்டுள்ளது. போலி மற்றும் தரமற்ற மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தரமற்ற மருந்து பட்டியல்: (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்யவும்)
Drug Alert List of Oct -2022-21-11-22