சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – மூன்றாம் பகுதி

ஏற்கனவே சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம்.  இன்று மீதமுள்ள தகவல்களை காண்போம்

 

  1. இங்கு‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல்.
  1. அன்னையின்அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை வேஷ்டி பத்திரமாக  வைத்திருப்பர்.   குழந்தை பிறந்து 6வது மாதத்தில் பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.
  1. அன்றுபத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள்.
  1. அந்தத்தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின் தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.  துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பைப் பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.
  1. தாலிபலத்துக்காகச் சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால் அம்மனே இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள்  என்பது ஐதீகம்.
  1. அம்மைநோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்குத் தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்குத் தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது
  1. அம்மன்சிவரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.
  1. உலகைஆள்பவள் மாரியம்மன் என்றாலும், கண்ணபுரத்தின் காவல், எல்லை தெய்வம்  செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே சமயபுரத்தாள் ஏற்றுக் கொள்கிறாள்.
  1. ஆதிமாரியம்மன் கோயிலுக்கு சென்று வணங்கிய பின்னரே, சமயபுரம் மாரியம்மனைத் தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.
  1. தமிழகத்தில்பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக காணிக்கை பெறும் தலம் சமயபுரம்.
  1. தாலிவரம் வேண்டி தாலி தங்கம் மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாகக்  கிடைக்கிறது.
  1. கண்ணனூர்,விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் சமயபுரம் அழைக்கப்படுகிறது.
  1. மாரியம்மன்கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும் இடம் பெற்றுள்ளன.
  1. கோயிலின்முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசு சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது.
  1. மே25, 2018 வெள்ளிக் கிழமை கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமாக மசினி என்ற 10 வயதான பெண் யானை கோபத்தின் ஆவேசம் காரணமாகப் பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது.