மெட்ரோ வழித்தடத்தில் உள்ள மனைகளில் 100 ச. அடிக்கு 250 ச. அடி வரை வீடு கட்டிக்கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
100 ச.அடிக்கு 2.5 என்ற தள வழி்காட்டி இனி மெட்ரோ வழிதடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மனைகளில் 50 சதவீதம் கூடுதலாக தளங்களை அமைக்க அனுமதிக்கப்படுவதாக மாநில வீட்டுவசதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையுள்ள பாதையில் 2.5 என்ற விகிதத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
புதிதாக அமையவிருக்கும் மாதவரம் – சோலிங்கநல்லூர் உள்ளிட்ட 2வது பாதையில் இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதனால் பெருங்குடி, நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வானளாவிய கட்டிடங்கள் வருவதோடு சென்னையின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.