அமெரிக்காவின் கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள மெக்டொனல்ஸ் பாஸ்ட்புட் உணவகங்களில் சாண்ட்விச் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு உடல்நடலைக்குறைவு ஏற்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் வயதான ஒருவர் உயிரிழந்தார் இதனையடுத்து அமெரிக்க நோய் தடுக்குப் மற்றும் கட்டுப்பாட்டு மைய்ய அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த உணவகங்களில் வழங்கப்பட்ட வெங்காயம் தரமற்றதாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

E-coli பாக்டீரியாவால் செரிமான கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பச்சை வெங்காயத்துடன் வழங்கப்பட்ட குவாட்டர் பவுண்டர் என்ற ஒருவகை சாண்ட்விச்சை தனது மெனுவில் இருந்து நீக்கிய மெக்டொனல்ஸ் அந்த உணவு வகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது.

மெக்டொனல்ஸ் சம்பவத்தை அடுத்து, பர்கர் கிங், கெ.எப்.சி., டாக்கோ பெல், பிட்சா ஹட் போன்ற அமெரிக்க பாஸ்ட் புட் உணவகங்கள் மற்றும் இல்லீகள் பீட்’ஸ் போன்ற மெக்ஸிகன் உணவகங்களும் பச்சை வெங்காயத்துடன் கூடிய உணவு வகைகளை தங்கள் மெனுவில் இருந்து நீக்கியுள்ளது.