அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சண்டிப்புரா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குஜராத் முதல்வர் இது குறித்து ஆட்சியர்கள், முதன்மை மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்திஇந்த பாதிப்பு பற்றி அவர் மறுஆய்வு செய்ததுடன், வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்புக்கு 56 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குஜராத் சுகாதார ஆணையாளர் ஹர்சத் பட்டேல் இது குறித்து,
“கடந்த ஒரு மாதத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய பலரும் குழந்தைகளாக உள்ளனர். எனக்கு தெரிந்தவரை, இந்த வைரசால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர், மொத்தம் 133 பேருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் அவர்களில் 47 பேருக்கு சண்டிப்புரா வைரசின் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது”
எனக் கூறியுள்ளார்.