அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5 மாதங்களில் 50 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகள் பலவும் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பல நாடுகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை தூக்கு தண்டனை விதிக்கும் நடைமுறையை மாற்ற தயக்கம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு, ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான 8 மாதங்களில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீா்ப்புகளை வழங்கி உள்ளது.
ஏற்கனவே 2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொலை வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன. ஆணவக் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2006 முதல் 2021 வரை அதிகபட்சமாக 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 2011-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 13 பேரில் 11 போ் 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்குடன் தொடா்புடையவா்கள்.
குஜராத்தில் கடந்த 2006 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் கடந்த 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டு மட்டும் 50 பேருக்கு தூண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.