டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் கட்சிகளின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி 5 மாநிலங்களில் கட்சி பெற்றுள்ள வாங்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை பெற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 105 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 75 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 34 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் பாஜக 2 இடங்களிலும, சிரோன்மணி அகாளிதளம் 8 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அங்கு பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது.