டில்லி

ந்து வட்டிக் கடன் அளித்து மக்களைத்  துன்புறுத்தும் 5 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களாக சில டிஜிடல் கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன.  இந்த செயலிகள் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரின் சாயலில் உள்ளதால் பலரும் இவற்றை நம்பி தரவிறக்கம் செய்கின்றனர்.  இவர்களுக்குக் குறுகிய கால கடன் என்னும் பெயரில் நிறுவனங்கள் அநியாய வட்டிக்குக் கடன்கள் அளிக்கின்றன.    பணத்தை நேரத்தில் திருப்பி செலுத்தாதவர்களுக்கு கடும் துன்பங்களும் ஏற்படுகின்றன.

இது குறித்து பலரும் புகார் எழுப்பியதை அடுத்து நிதி நிர்வாக ஆர்வலரான ஸ்ரீகாந்த் என்பவர் ஒரு ஆய்வு செய்துள்ளார்.   அந்த ஆய்வு குறித்து ஸ்ரீகாந்த், “துரிதமாகக் கடன் பெற விரும்புவோரைக் குறி வைத்து இந்த செயலிகள் இயங்குகின்றன.   இந்த செயலிகளின் நிறுவனப் பெயர்கள் பெரிய நிறுவனங்களைப் போலவே உள்ளதால் பலருக்கும் இவற்றை வேறுபடுத்தத் தெரியவில்லை.   இந்த செயலிகளை 4 லட்சத்தில் இருந்து 10 லட்சம் பேர் வரை தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த நிறுவனங்கள் எவையும் இந்தியப் பொருளாதாரத் துறையினரால் அங்கீகரிக்கப்படாதவை ஆகும்.  எனவே இந்த கடன்கள் எவையும் ரிசர்வ் வங்கியின் கீழ் வழங்கப்படாதவை ஆகும்.   அத்துடன் இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க வேண்டிய அலுவலர் பெயர் மற்றும் தொலைபேஎசி எண்கள் கிடையாது.   சரியான முகவரியும் அளிக்கப்படுவதில்லை.

இது போல ஒரு நிறுவனத்திடம் கடன் வாங்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணால் பணத்தைத் திருப்பி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதையொட்டி அந்நிறுவன அதிகாரி பணத்துக்குப் பதிலாக அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ள தகவல் ஸ்கிரீன் ஷாட் ஆகி டிவிட்டரில் உலவியது.   அதன் பிறகு அந்த அதிகாரி தனது செயல்களை நிறுத்திக் கொண்டுள்ளார்.

அது மட்டுமின்றி இந்த செயலி நிறுவனங்கள் கடன் அளிப்போர் மொபைலில் உள்ள விவரங்களைப் பார்வையிட உரிமை பெற்று விடுகின்றனர்.   கடன் வாங்கியவர்களிடம் இதை வைத்தும் மிரட்டல் நடைபெறுகிறது.  கடன் தொகையை ஒரு நாள் தாமதமாகச் செலுத்திய ஒருவரது மொபைலில் இருந்த அனைவரையும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்து அவரை அவமானப்படுத்தும் செயலும் நடந்துள்ளது.

இது குறித்து நாங்கள் கூகுள் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி உள்ளோம்.  இதுவரை கூகுள் நிறுவனம் 5 செயலிகளை நீக்கி உள்ளது.   இவற்றில் எவை உண்மையான நிறுவனம் எனத் தெரியாததால் இந்த நீக்கம் தாமதமாகி வருகிறது.  மக்கள் இந்த செயலிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.   நியாயமான கடன் செயலிகள் மற்றும் கந்து வட்டிக் கடன் செயலிகள் குறித்து அறிந்து செயல்பட வேண்டும். “ எனத் தெரிவித்துள்ளார்.