சென்னை: தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் மாநகராட்சியுடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவானது.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

இதனை அடுத்து தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரத்தை என்பதை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் மற்றும் மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்,  பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்லபாக்கம் ,மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவசர சட்டம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அவசர சட்டத்திற்கு அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து தாம்பரம் மாநகராட்சி ஆகி விட்டது என்பது குறித்து அரசு இதழில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக, வெளியான அரசாணையில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கங்காரணை, திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.