ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!! ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்த தாக்குதலில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஊடுறுவி ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த முறை ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
ஜம்மு காஷ்மிரின் மச்சில் செக்டார், குப்வாரா மாவட்டம் நவுகாம் செக்டாரைத் தொடர்ந்து இன்று மாலை உரி செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் குண்டடிபட்டு 5 பயங்கரவாதிகள் இறந்தனர். ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டாலும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


English Summary
5 millitants shot dead by indian military at jammu kashmir