டோக்கியோவைச் சேர்ந்த சோலரியே (Solarie) என்ற விளம்பர நிறுவனமும், மற்றும் அதன் தலைவரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான ரெய்கா குரோகி மீது, சுமார் ¥157 மில்லியன் (சுமார் 10 கோடி ரூபாய்) வரி ஏமாற்றியதாக ஜப்பான் அரசு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது, இருந்தபோதும் இவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.

ரெய்கா மியாசாக்கி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான குரோகிக்கு சுமார் 5 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் அழகு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை விளம்பரப்படுத்தி, அதற்கான கட்டணத்தை தனது நிறுவனமான சோலரியே மூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

வழக்குத் தகவலின்படி, 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் மொத்தம் ¥496 மில்லியன் வருமானத்தை மறைத்து, ¥126 மில்லியன் கார்ப்பரேட் மற்றும் பிற வரிகளை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதேபோல், 2022 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரை ¥31 மில்லியன் நுகர்வு வரியையும் செலுத்தாமல் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி ஏய்ப்பு மூலம் கிடைத்த பணம், நிறுவனத்தின் தினசரி செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், ரெய்கா குரோகி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “என் செயலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். தேவையான திருத்தங்களை செய்து, வரிகளை உடனடியாக செலுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

டிஜிட்டல் பிரச்சாரம் : இன்ஃப்ளூயன்சர்கள் காட்டில் பண மழை…

[youtube-feed feed=1]