வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின்  எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந் நாட்டில் இதுவரை 2,87,65,423 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர்களில் 1,89,73,190 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,11,133 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11,20,09,909 ஆக இருக்கிறது. பலி எண்ணிக்கை 24,79,075 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது.