சென்னை: தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.  குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு, நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தில்  இதுவரை இல்லாத அளவுக்கு கொளும் வெயிலுடன் அனல்காற்று வீசுகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (April 28) ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றுக்கு இடையே  சில இடங்களில் வெப்பச்சலன மழையும் பெய்தது. இதனால், வெப்பம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், எல்-நினோ பாதிப்பு முடிவின் அடுத்த ஆண்டு என்கிற காரணத்தினாலும் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் வெயில் அடிக்கிறது.  இப்போதே இந்த அளவுக்கு வெயில் இருக்கிறது எனில், கத்திரி வெயில் எப்படி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திரி வெயில் என்பது மே மாதம் 4ம் தொடங்கி அந்த மாதம் 28ல் முடிந்துவிடும். இந்த நாட்களில் வழக்கமாக வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் கடந்த பின்னரும் கூட ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது.  அதுபோல இந்த ஆண்டும் சென்னை உள்பட தமிழ்நாட்டு மக்களை அக்னி வெயில் மேலும் வாட்டி வதைக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள்,  பகல் நேரங்களில் எக்காரணம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இநத நிலையில், தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.  குறிப்பாக்,  காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.