லாஸ்கா

லாஸ்காவில் எங்கேரேஜின் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணம் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமாகும்.  இங்குள்ள பனி படர்ந்த மலைகள் பயணிகளின் மனதை மிகவும் கவர்ந்துள்ளன.   இதைக் காணச் சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது வழக்கமாகும்.

அவ்வகையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலம் சில சுற்றுலாப் பயணிகள் பனிமலைகளை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.  அப்போது காற்று வேகமாக வீசி உள்ளது.  மேலும் கடும் பனிப்பொழிவால் விமானியால் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த ஹெலிகாப்டர் விமானம் அக்கிருந்து நிக் என அழைக்கப்படும் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.   ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.  இதையொட்டி இங்கு விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.