கொழும்பு:

லங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள  இலங்கை பிரதமர் ராஜபக்சே முதன்முறையாக 5 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். ஏற்கனவே ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே  கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இந்தியா வந்து மோடி உள்பட பல தலைவர்களை சந்தித்து சென்றார்.

இந்த நிலையில்,  இலங்கை பிரதமர் ராஜபக்சே, 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் பதவிக்க போட்டியிட்ட ராஜபக்சேவின் சகோதரர்  கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அதுபோல, முன்னாள் அதிபரா மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு (2019) நவம்பர் இறுதியில், அதிபர் கோத்தபயா ராஜகப்சே இந்தியா வந்து பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார்.

5 நாள் இந்தியாவில் முகாமிடும் ராஜபக்சே, டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், , வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கும் செல்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.