கொல்கத்தா:
துபாயில் இருந்து ஒரு விமானம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்துக்கு நேற்றிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த 60 வயது முதியவரை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர்.
அவர் 5.35 கிலோ எடையுள்ள 8 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் அந்த முதியவரால் நன்றாக நடக்க முடியும் என்பதும், கடத்தலுக்காக சக்கர நாற்காலியை பயன்படுத்தி நாடகமாடியதும் தெரியவந்தது. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரது விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.