தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், சுமார் 180 கி.மீ.க்கு அப்பால் உள்ள ஹைதராபாத்திலும் உணரப்பட்டதை அடுத்து மக்கள் பீதி அடைந்தனர்.
தெலுங்கானாவில் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக ரிக்டரில் 5.3 ரிக்டர் அளவிலான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஹைதராபாத் உட்பட தெலுங்கானா முழுவதும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கோதாவரி ஆற்றுப்படுகையில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது அந்தளவுக்கு சக்தி வாய்ந்ததாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.