டில்லி,

டில்லியில் இன்று நடைபெறும்  குடியரசு தினவிழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு  4 ஆவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசின் மலியான அரசியல் போக்கையே இது காட்டுகிறது என்று கூறி உள்ளது.

நாட்டின் 69வது குடியரசு தின விழா தலைநகர் டில்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஆசியான் நாட்டை சேர்ந்த 10 தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் குடியரசு தின விழாவில்  மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் , உள்நாட்டு பிரமுகர்கள்,  உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

இந்தவிழாவில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சோனியாவுக்கு, முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு வந்தது.  ஆனால்,   இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

4வது வரிசையில் அமர்வதில் ராகுல் காந்திக்கு பிரச்னை ஏதும் இல்லை என்றும், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பாஜக மலிவான அரசியல் செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது.