டில்லி:

நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில்  வாக்குப்பதிவு  நடைபெற்று முடிவடைந்தது. இதில் 64 சதவித வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று  9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நடைபெற்றது.  இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இன்றைய தேர்தலில், எராளமான பாலிவுட் பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதுபோல,  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கை பதிவு செய்தார்.

சில வாக்குச்சாவடிகளில், சரியாக 6 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு  டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

இன்றைய தேர்தலில்  64 சதவிகித வாக்குகள் பதிவு ஆனதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் 

பீகார் –  53.67 %

ஜம்மு-காஷ்மீர் – 9.79 %

மத்திய பிரதேசம் – 65.86 %

மகாராஷ்டிரா – 51.06 %

ஒடிசா – 64.05 %

ராஜஸ்தான் – 62.86 %,

உத்தரபிரதேசம் – 53.12 %

மேற்கு வங்கம் – 76.47 %

ஜார்க்கண்ட் – 63.40 %

அதிகபட்சமாக  மேற்கு வங்காளத்தில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.