சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து உள்ளது.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் என்ற விவரத்தை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.
ஒட்டாபிடாரம் – எம்.சி.சண்முகையா
சூலூர் – பொங்கலூர் பழனிசாமி
திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன்
அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி
வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ந் தேதி தொடக்கம்
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 29ந் தேதி
வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 30ந் தேதி
தேர்தல் வாக்குப்பதிவு: மே 19ந்தேதி
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி மே 23ந் தேதி