சென்னை: தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் (பபாசி – BAPASI) ) நடத்தப்படும் 48வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 27ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இணைந்து தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மக்களின் பேராதாரவு பெற்ற BAPASI புத்தக கண்காட்சி வழக்கமாக பொங்கல் திருவிழா விடுமுறை காலத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், பொங்கல் விடுமுறை காலங்களில் பெரும்பாலோர் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்றுவிடுவதால், கண்காட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு புத்தங்கள் விற்பனை ஆவது இல்லை. இதனால், நடப்பாண்டு முதல் சென்னை புத்த கண்காட்சியை டிசம்பர் இறுதியில் தொடங்கி, பொங்கலுக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு, சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. அதன்படி வரும் 27ந்தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்அறிவித்துள்ளது.
மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர் துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்
புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இனி ‘பபாசி புத்தகக் கண்காட்சி’ டிசம்பரில் நடைபெறும் என அறிவிப்பு…