
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் 47 வது முறையாக இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை எழுதுகிறார்
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே மாவட்டத்தில் உளள கோஹரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ். 77 வயது நிரம்பியுள்ள இவர் கடந்த 1968ம் ஆண்டு முதல் முதலில் 10ம் வகுப்பு தேர்வு எழுத தொடங்கினார்.
ஆனால் இவரால் தேர்வில் சேர்ச்சி பெற முடியவில்லை. எனினும் தொடர்ந்து தேர்வை எழுதி வந்தார். ஆனால் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் வரும் 10ம் தேதி தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வை இந்த ஆண்டும் எழுதுகிறார். இந்த முறை அவர் தேர்வு எழுதுவதையும் சேர்த்தால் இது அவருக்கு 47வது மு¬றாகும்.
10ம் தேர்ச்சி பெறாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று இவர் எடுத்த சபதத்தில் இன்னமும் உறுதியாக இருகுகிறார். இவர் தற்போது முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்சன் பெற்றும், அருகில் உள்ள ஒரு கோவிலில பிரசாதம் வாங்கி சாப்பிட்டும் தனது காலத்தை கழித்து வருகிறார்.
இவரது முயற்சியை கண்டு பலர் புத்தகம், பேனாக்களை அன்பளிப்பாக அளித்துள்ளனர். ‘‘இந்த முறை சில ஆசிரியர்களிடம் சென்று படித்துள்ளேன். அதனால் இந்த முறை நிச்சயமாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிடுவேன்’’ என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel