திருவனந்தபுரம் :
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கேரள மாநிலத்தவர் தான், அதிக அளவில் வெளிநாடுகளில் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவது, கேரளாவுக்கு என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அவை :
திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மற்றும் கண்ணனூர்.
(கண்ணனூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்து இரு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது.)
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நான்கு விமான நிலையங்களில் ஆயிரத்து 260 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வெளி இடங்களில் 230 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 448 கோடி ரூபாயாகும்.
கடந்த ஜுன் மாதம் வரையிலான கணக்கு இது.
கடந்த ஜு,லை மாதம் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டு, விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 30 கிலோ தங்கம் இதில் சேர்க்கப்படவில்லை.
– பா. பாரதி