மும்பை: பிரபல பாலிவுட் பட நடிகர் அக்சய்குமாரை தொடர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய ராம்சேது பட ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் 45 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அக்சய்குமார் ராம்சேது என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அக்சய் குமாருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதுடன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அக்சய் குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்த நிலையில், அக்சய்குமார் மேல் சிகிச்சைக்கா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்களின் அறிவுரையின் படி நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராம்சேது படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டது. இதில், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் 45 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அத்ன் காரணமாக, ராம்சேது பட ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மும்பை படஉலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]