சிம்லா:
இமாச்சலபிரதேசம் சிம்லாவில் தனியார் பஸ் ஒன்று ரோட்டில் இருந்து இறங்கி ஆற்றில் மூழ்கியது. இதில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சிம்லா மாவட்டத்தில் நெர்வே பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியான சிம்லாவின் பார்டர் பகுதியாகும். இந்த வழியாக உத்தரகாண்ட் தியுனி பகுதிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் இறங்கியது.
. பேருந்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தாகவும், அதில் 44 பேர் பரிதாபமாக பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.