சம்பாரன்
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் கொண்டாடப்பட்ட பண்டிகையின்போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். பிறகு குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.
இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் என 15 மாவட்டங்களில் 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
பேரிடர் மேலாண் துறை வெளியிட்ட அறிக்கையின்ப்ச்ஃப் இதுவரை 43 உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ்குமாஅர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.