
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த வருடம் காவல்துறையில் 42 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேலும் “1039 பேர் காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்கள்” என்றும் கூறியுள்ளது.
தமிழக அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆகவே அரசு கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்கும் என நம்பப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel