திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கினாலும், எதிர்பாராதவிதமாக அது முறிந்துவிட்டால் கோபம், சோகம், பதட்டம், பயம் போன்ற பல உணர்ச்சிகள் எழுகின்றன.
விவாகரத்து காரணமாக ஏற்படும் உணர்ச்சி பாதிப்பு குறித்து அனைவரும் அறிந்திருந்த போதும், ஒரு பொருளாதார இதழ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு, இந்தியாவில் இதனால் ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்து தி எக்கனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கனன் பால், என்பவர் மேற்கொண்ட இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 42% ஆண்கள் விவாகரத்து நடவடிக்கைகள் அல்லது ஜீவனாம்சத்திற்காக கடன் வாங்கியதாக பகிர்ந்துள்ளார்.

விவாகரத்துகள் மூலம் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து விவாகரத்துகள் அதிகரித்து வரும் இந்தியாவின் டயர் 1 மற்றும் 2 வகைப்பாட்டில் உள்ள நகரங்களில் 1,258 பேரிடம் ஆறு மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
திருமண செலவுகள் குறித்து விவாதிக்கும் பலரும் விவாகரத்து செய்வதால் ஏற்படும் நிதி விளைவுகள் குறித்து விவாதிப்பதில்லை.
இந்தியாவில் விவாகரத்து என்பது கடுமையான மனநலம் மற்றும் சமூகச் செலவுகளைச் சார்ந்தது, பராமரிப்பு, ஜீவனாம்சம், சட்டச் செலவுகள், தொழில் தொடர்பான இடையூறுகள் என பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது.
விவாகரத்து செய்தவர்களில் 67% பேர் நிதி குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர், இதில் 90% பேர் மாதம் ஒருமுறையாவது குடும்ப செலவுகளுக்கான பணம் குறித்து சண்டையிடுகின்றனர்.
42% ஆண்கள் விவாகரத்து நடவடிக்கைகள் அல்லது ஜீவனாம்சத்திற்காக கடன் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
43% வழக்குகளில், திருமணத்திற்குப் பிறகு கணவர்கள் முழு குடும்ப செலவுகளையும் ஏற்றுள்ளனர்.
ஆண்களின் ஆண்டு வருமானத்தில் 38% பராமரிப்பு கொடுப்பனவுகளுக்குச் சென்றுள்ளது.
அதேபோல், திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை ஏற்கும்போது பெண்கள் விவாகரத்துக்குப் பின் 23% பேர் வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
வேலை செய்யும் பெண்களில் 16% பேர் வேலையின் தீவிரத்தைக் குறைத்தனர், 30% பேர் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜீவனாம்சம் தவிர மற்ற சட்ட கட்டணங்களுக்காக (போக்குவரத்து, இடைக்கால பராமரிப்பு மற்றும் மனநலச் செலவுகள்) 16% பெண்கள் ₹5 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதாகவும், 49% ஆண்கள் ₹5 லட்சத்திற்கு மேல் செலவிட வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
விவாகரத்துக்கான காரணங்கள்
பெண்கள்:
56% பேர் மாமியார் தகராறை மேற்கோள் காட்டினர்
43% பேர் நிதிப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டனர்
ஆண்கள்:
42% பேர் நிதிப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டனர்
21% பேர் இணக்கமின்மையைக் குறிப்பிட்டனர்
21% பேர் துரோகத்தைக் குறிப்பிட்டனர்