புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, பலியானவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 29,682 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழக்க, அதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 390 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன் காரணமாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 24,614 ஆக உள்ளது. இன்னமும், 4,522 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.